Test

فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَّقَامُ إِبْرَاهِيمَ وَمَن دَخَلَهُ كَانَ آمِنًا وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ﴿٩٧

97. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (அதாவது அதில் இப்ராஹீம்  நின்ற  இடம் இருக்கின்றது;  மேலும்  எவர்  அதில்  நுழைகிறாரோ அவர் அச்சம்  தீர்ந்தவராக ஆகிவிடுவார்; இன்னும் அதற்க(ச் செல்வதற்குரிய பாதையில்  பயணம்  செய்ய  சக்தி  பெற்றிருக்கும் மனிதர்களுக்கு  அல்லாஹ்வுக்காக  அவ்வீடு  சென்று  ஹஜ்  செய்வது  கடமையாகும்.  ஆனால், எவரேனும் இ தை நிராகரித்தால்  (அல்லாஹ்வுக்குக்  குறை  ஏதுமில்லை)   நிச்சயமாக அல்லாஹ்  உலகத்தாரை விட்டும்  தேவை  அற்றவனாக  இருக்கின்றான்.

 

وَ
إِبْرَاهِيمَ
مَّقَامُ
بَيِّنَاتٌ
آيَاتٌ
فِيهِ
இன்னும்
இப்ராஹீம்
நின்ற இடம்
தெளிவான
அத்தாட்சிகள்
அதில் உள்ளன

 

وَ
آمِنًا
كَانَ
دَخَلَهُ
مَن
இன்னும்
அச்சம் தீர்ந்தவர்
ஆகிவிட்டார்
அதில் நுழைந்தார்
அவர்

 

لِلَّهِ
عَلَى النَّاسِ
حِجُّ
الْبَيْتِ
مَنِ اسْتَطَاعَ
அல்லாஹ்வுக்கு
அம்மக்கள் மீது
நாடிச்செல்வது
அவ்வீடு
சக்திபெற்றவர்

 

 

சுவனத்தை நோக்கி…

17-05-2013 அன்று ஜித்தா துறைமுகத்தில் நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி

மவ்லவி. K. S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் ஆற்றிய உரை

வீடியோ தயாரிப்பு & வெளியீடு
துறைமுக அழைப்பகம்-ஜித்தா.

ஸுரத்துல் பகரா 248 முதல் 250 வரை

وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ آيَةَ مُلْكِهِ أَن يَأْتِيَكُمُ التَّابُوتُ فِيهِ سَكِينَةٌ مِّن رَّبِّكُمْ وَبَقِيَّةٌ مِّمَّا تَرَكَ آلُ مُوسَىٰ وَآلُ هَارُونَ تَحْمِلُهُ الْمَلَائِكَةُ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ﴿٢٤٧‎‎﴾

248. இன்னும், அவர்களுடைய நபி அவர்களிடம், “நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு பேழை வரும்; அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும்; இன்னும், மூஸாவின் சந்ததியினரும்; ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும்; அதை வானவர்கள் சுமந்து வருவார்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது“ என்று கூறினார்.

 

முன்மாதிரி முஸ்லிம் குடும்பம்

தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) வழங்கும்
1433 சிறப்பு தர்பியா நிகழ்ச்சி

நாள்: 23-07-2012
இடம்: தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) -சவூதி அரேபியா

உரை: அஷ்ஷைக்: ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி
அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (KIC)

உணவு உண்பதில் சில ஒழுங்குகள்

அஷ்-ஷைக்: K. S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

அழைப்பாளர், அல்-கோபர் தாஃவா நிலையம் – சவூதி அரேபியா

சாப்பிட்டு முடிந்த பின் ஓதும் துஆ

النَّبِيِّصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ :” مَنْ أَكَلَ طَعَامًا فَقَالَ :اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍمِنِّي وَلا قُوَّةٍ

“”என் முயற்சியோ, என்வலிமையோ எதுவுமின்றி எனக்கு உணவளித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்”

உணவு உண்பதில் சில ஒழுங்குகள்

بسم الله الرحمن الرحيم
நபி(ஸல்)அவர்கள் சாப்பிடுவதற்காகவும்ஒழுங்குமுகைளை கற்றுத்தந்துள்ளர்கள் அதை பேணி நடந்தால் நாம் உணவு உண்பதும்அல்லாஹுவிடத்தில் கூலி பெற்றுத்தரக்கூடிய அமைந்து விடும்.
1. ஹலாலானவையே உண்பது, குடிப்பது.

நம்பிக்கை கொண்டவர்களே! நாம்உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றை (ஹலாலானவைகளை) உண்ணுங்கள். நீங்கள்அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருப்பீர்களாயின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திவாருங்கள். (அல்பகறா : 172)

2. உணவு உண்பதற்கு முன் இரு கைகளையும் கழுவிக் கொள்ளவேண்டும்.
3. சாப்பிட ஆரம்பிக்கும் போதுபிஸ்மில்லாஹ் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும். உங்களில் ஒருவர் உணவு அருந்தினால் அல்லாஹ்வின் பெயரைக (பிஸ்மில்லாஹ் என்று) கூறட்டும்.
ஆரம்பத்தில்அதைக்கூற மறந்து விட்டால் Continue reading

ஏகத்துவத்தை உள்ளத்தில் அதிகரிக்கச் செய்யும் காரியங்களில் சில

K. S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

இறைவனை நம்பி வாழ்பவரே! ஏகத்துவத்தை உள்ளத்தில் வளர்த்துக் கொள்ளும் காரணங்களை கடைப்பிடி!

ஏகத்துவம் என்பது ஒரு மரம் போன்றதாகும் மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சப்படும் போது வளர்ந்து அலங்காரமாகி பலன் தருவது போல் அல்லாஹ்வை நெருங்குவதற்கான செயல் களைச் செய்வதன் மூலம் அல்லாஹ்வின் அன்பு, அவனை அஞ்சுவது, அவனிடமே ஆதரவு வைப்பது அதிகமாகிவிடும், அவனையே சார்ந்து வாழ்வது அதிக பலமாகும்.

ஏகத்துவத்தை அதிகரிக்கச் செய்யும் காரியங்களில் சில:

1. அல்லாஹ்விடத்திலுள்ளதைப் பெறும் ஆவலில் அவனுக்குக் கட்டுப்படுவது
2. அல்லாஹ்-வின் தண்டனையை பயந்து பாவங்களை விடுவது
3. வானங்கள், பூமியில் உள்ள ஆட்சியை சிந்தித்தல்
4. அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளையும் அவைகள் மூலம் வெளிப்படக் டியவற்றையும் அறிய வேண்டும், அத்துடன் அல்லாஹ்வின் கண்ணியம் ஆற்றலின் மீது அவைகள் அறிவிப்பதையும் அறிய வேண்டும் Continue reading

பள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்-2

K. S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

எனது சகோதரா! பள்ளியில் பேண வேண்டிய அதிகமான ஒழுக்கங்கள் உள்ளன அவற்றில்சில:

7. பள்ளிக்குச் செல்பவர் ஓத வேண்டிய துஆ:

…..اَللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا وَفِي بَصَرِي نُورًا وَفِي سَمْعِي نُورًا وَعَنْ يَمِينِي نُورًا وَعَنْ يَسَارِي نُورًا وَفَوْقِي نُورًا وَتَحْتِي نُورًا وَأَمَامِي نُورًا وَخَلْفِي نُورًا وَاجْعَلْ لِي نُورًا….بخاري.

……..இறைவா! எனது உள்ளத்திலும், எனது பார்வையிலும், எனது செவியிலும், எனது வலது, இடது புறத்திலும். எனது மேலும், கீழும், எனக்கு முன்னும், பின்னும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். நூல்: புகாரி6316.

8. பள்ளிக்குள் நுழைபவர் வலது காலை முற்படுத்தி நுழைவதும் வெளியேறும்போது இடது காலை முற்படுத்தி வெளியேறுவதும் விரும்பத்தக்கதாகும்.
:நீ பள்ளிக்குள் நுழைவதாக இருந்தால் வலது காலை முற்படுத்தி நுழைவதும் வெளி யேறுவதாக இருந்தால் இடது காலை முற்படுத்தி வெளியேறுவதும் சுன்னத்தைச் சார்ந்ததாகும் என அனஸ் பின் மாலிக் (ரலி) கூறுகிறார்கள், நூல்: ஹாகிம் 791

Continue reading

பள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்

பள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் – K. S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

1. பாங்கு சப்தம் கேட்ட பின்னர் தக்க காரணமின்றி ஜமாஅத்துடன் கடமையான தொழுகையை தொழாமல் பள்ளியிலிருந்து வெளியேறுவது இஸ்லாமிய ஒழுக்கங்களைச் சார்ந்ததல்ல.

. 1521 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْمُهَاجِرِ عَنْ أَبِى الشَّعْثَاءِ قَالَ كُنَّا قُعُودًا فِى الْمَسْجِدِ مَعَ أَبِى هُرَيْرَةَ فَأَذَّنَ الْمُؤَذِّنُ فَقَامَ رَجُلٌ مِنَ الْمَسْجِدِ يَمْشِى فَأَتْبَعَهُ أَبُو هُرَيْرَةَ بَصَرَهُ حَتَّى خَرَجَ مِنَ الْمَسْجِدِ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَمَّا هَذَا فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ -صلى الله عليه وسلم-..مسلم

நாங்கள் அபூஹுரைரா(ரலி)யுடன் பள்ளியில் அமர்ந்திருந்தோம் அப்போது முஅத் தின் பாங்கு கூறினார், ஒரு மனிதர் பள்ளியிலிருந்து எழுந்து நடந்து சென்றார், அபூ ஹுரைரா (ரலி) அவரின் பக்கமாக தனது பார்வை செலுத்தினார்கள், அவர் பள்ளியி லிருந்து வெளியேறி வெளியேறி விட்டார், அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் இவர் அபுல் காசிம் (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார் என்று கூறியதாக அபூ ஷஅதா(ரலி) கூறினார்கள். நூல்: முஸ்லிம், 1521 Continue reading